Reading Time: < 1 minute

கனடாவில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

குறித்த பெண் தவறுதலாக மேற்கொண்ட அழைப்பினால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

42 வயதான குறித்த பெண்ணை, குயெல்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு குறித்த பெண் தவறுதலாக அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பெண் தவறுதலாக அழைப்பினை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அழைப்பினை எடுத்த பெண் வேறும் ஒர் பொலிஸ் நிலையத்தில் தேடப்பட்டு வருபவர் என கண்டறியப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த பெண், பிணை நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.