Reading Time: < 1 minute

கனடாவில் இந்த ஆண்டு ஜூன் 1 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் ஒரு இலட்சம் வரையான சுகாதார சேவைத் துறை சார்ந்த பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் (CIHI) தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

ஜூன் 15 வரை நாட்டில் மொத்தம் 94,873 சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூா்வ தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இது நாட்டில் இந்தக் காலப்பகுதியில் பதிவான தொற்று நோயாளர் தொகையில் 7 வீதமாகும் எனவும் கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.