Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் சலகை இயந்திரங்கள் மற்றும் ஆடைகளை உலர்த்தும் இயந்திரங்கள் என்பன தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உலர்த்தும் இயந்திரங்கள் மட்டுமல்லாது சலவை இயந்திரங்களும் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் சலவை இயந்திரங்கள் மற்றும் ஆடை உலர்த்தும் இயந்திரங்கள் தீப்பற்றிக் கொண்ட 670 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் பெரும்பாலானவை ஆடை உலர்த்தும் இயந்திரங்கள் தொடர்பானவை என தெரிவிக்கப்படுகின்றது.
சலவை இயந்திர தீ விபத்து அரிதானது, ஆனால் ஏற்படலாம். அவதானமாக இருக்க வேண்டும்” என டொரண்டோ தீயணைப்பு சேவையின் பொது கல்வி பிரிவு மெலிசா சிச்சொசெல்லி கூறியுள்ளார்.




