Reading Time: < 1 minute

கனடாவின் பிராம்டனில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று நடைபெற உள்ளது.

Tamil Business Directory

கடந்த 2019 ஆம் ஆண்டில் மாபெரும் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் பாரிய ரசிகர்களின் வரவேற்பு காணப்பட்டது.

அந்த நிலையில் மீண்டும் இவ்வாறான ஓர் கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

t20 போட்டி தொடராக இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக 18 நாட்களில் 25 போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் பிரம்டன் வுலஸ், மொன்றியல் டைகர்கள், மிஸ்ஸிகா பான்தர்ஸ், சர்ரே ஜகுவார்ஸ், ரொரன்டோ நெசனல்ஸ் மற்றும் வான்கூவார் நைட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.

வட அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபல்யம் அடையாத போதிலும் உலகின் இரண்டாவது அதிக அளவில் பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் போட்டி கருதப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியை பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்தனர்.

குறிப்பாக 133 மில்லியன் பேர் இந்த போட்டியை கண்டு ரசித்தனர் கடந்த போட்டித் தொடர்களில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான லசித் மாலிங்க, கிரிஸ் கேய்ல், யுவராஜ் சிங் போன்றவர்கள் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறைப் போட்டித் தொடரிலும் கிறிஸ் கெயில், சாஹிட் அப்ரிடி, சக்கபல் ஹசன், ஹர்பஜன் சிங் போன்றவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.