கடாவின் சனத்தொகை வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் நிலைத்த நிலையில் இருக்கும் என நாடாளுமன்ற பாதீட்டுஅலுவலகம் மதிப்பீடு செய்துள்ளது.
அண்மைய அரசாங்க குடியேற்ற நிலைத் திட்டத்தின் கீழ், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான அனுமதிகளில் செய்யப்பட்ட குறைப்புகள் இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
புதிய குடியேற்ற இலக்குகளின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையின் 7.6% ஆக இருந்த தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5% ஆகக் குறைக்கும் அரசின் இலக்கு அடையப்படும் என பாதீட்டு அலுவலக மதிப்பீடு தெரிவிக்கிறது.
எனினும், இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட ஒரு ஆண்டுக்கு பின்னர் நிறைவேறும் என கூறப்படுகிறது. மத்திய அரசாங்க குடியேற்ற திட்டத்தின் கீழ், தற்காலிக வேலை மற்றும் மாணவர் வீசாக்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் சுமார் 6.74 இலட்சமாக இருந்த அனுமதிகள், இவ்வாண்டில் 3.85 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், 2026 முதல் 2028 வரை ஆண்டுதோறும் 3.8 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.48 இலட்சம் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு விரைவான நிரந்தர குடியுரிமை வழங்கும் இரண்டு சிறப்பு திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒருமுறை திட்டங்கள், கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள்தொகையின் 5% க்குக் கீழ் குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.