Reading Time: < 1 minute

கனடாவில் பேரி (Barrie) பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.

Tamil Business Directory

சந்தேக நபர் ஆயுதம் தாங்கிய நிலையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கையில் கத்தியுடன் இருந்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்த போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பொலிஸார் பின்னர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.