Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட நான்கு பேருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் உரக்கமான இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

தென்மேற்கு ஒன்றாறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சமூக சிந்தனை கொண்ட ஓர் பெண் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

தனது சமூகத்திற்காக அயராது உழைத்து தன்னலமற்ற அடிப்படையில் செயற்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஓர் கரிசனையுடைய தாய் என நினைவு அஞ்சலியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்ணின் இழப்பு சமூகத்திற்கு ஓர் பாதிப்பு என அவரது தோழியான ட்ரீனா அப்கட் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகனும் மகளும் சிறந்த நற்பண்புகளை கொண்டவர்கள் எனவும் அனைவருடனும் நட்புறவாடக் கூடியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்களுக்கான காரணம் பற்றியோ உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விவரங்கள் பற்றியோ போலீசார் இதுவரை தகவல்களை வெளியிடவில்லை.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.