Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் அண்மிக்கின்றது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் எட்டு இலட்சத்து 96ஆயிரத்து 739பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 22ஆயிரத்து 335பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 221பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 442பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 43ஆயிரத்து 962பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.