Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 926பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 55ஆயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21ஆயிரத்து 807பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 857பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 393பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.