Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்தது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 437பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கனடாவில் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 21ஆயிரத்து 988பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 69ஆயிரத்து 671பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 188பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.