Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 18ஆயிரத்து 120பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், ஏழு இலட்சத்து 15ஆயிரத்து 72பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 453பேர் பாதிக்கப்பட்டதோடு, 106பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 919பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 870பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 23ஆயிரத்து 33பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.