Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 493பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு 570பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 141பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஐந்தாயிரத்து 908பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 15ஆயிராயிரத்து 444பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 55பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




