Reading Time: < 1 minute

கனடாவில் நகையகம் ஒன்றை கொள்ளையிட்டதாக 14 வயதான சிறுவன் ஒருவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நோர்த் யார்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

ஷெப்பர்ட் அவென்யூ மற்றும் டான் மில்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடைக்குள் முகமூடி அணிந்த மூன்று சந்தேக நபர்கள் நுழைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

நகையகத்தில் வைக்கப்பட்டிருந்த நகை காட்சி பெட்டிகளை சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் ஒரு தொகை நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் ஒருவர் அந்த இடத்தை விட்டு கால்நடையாகச் தப்பிச் சென்றுள்ளார், ஏனைய இருவரும் திருடப்பட்ட வாகனமொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரதான இரண்டு சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.