Reading Time: < 1 minute

கனடாவில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் உறவினர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

ஹமில்டனின் ஒட்டாவா வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

77 வயதான பெண் ஒருவர் கடந்த வாரம் குடியிருப்பு தொகுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை சில நாட்களாக காணவில்லை என அயலவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் குறித்துப் பெண் தங்கி இருந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அந்தப் பெண் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

படுக்கை அறையிலேயே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் மற்றுமொருவரும் கொலையுண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பார்பரா சர்ச் என்ற 77 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் ஒரு படுகொலை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உறவினர்களை கண்டறிவதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.