Reading Time: < 1 minute

கனடாவின் ஹமில்டனில் ஆரம்ப பாடசாலையொன்றில் குண்டு இருப்பதாக மிரட்டிய 13 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சிறுவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மவுண்ட் அல்பியன் ஆரம்ப பாடசாலைக்கு தொலைபேசி வாயிலாக குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் தாம் இவ்வாறு குண்டு தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவன் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி முதல் இதுவரையில் ஹமில்டன் பாடசாலைகளில் 16 சந்தர்ப்பங்களில் குண்டு தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு நபரை கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்களை கைது செய்வது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.