Reading Time: < 1 minute

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப்பில் பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil Business Directory

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் கனடாவின் ஒன்றாரியோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

6 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலை மீது பெயிண்டை ஊற்றியுள்ளனர். சிலையின் அடிப்பாகத்தில் இந்திய அரசாங்கம், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வாசகங்களை எழுதியுள்ளனர்.

இதேவேளை, காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டுள்ளனர்.