Reading Time: < 1 minute

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் பகுதியில் வீட்டில் இருந்து காணாமல் போன 6 வயது சிறுவன், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று அல்பெர்டா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Tamil Business Directory

அந்த சிறுவன் மாலை 5 மணியளவில் தனது வீட்டில் கடைசியாக காணப்பட்டதாகவும், ரொக் வேய் Rocky Way பகுதியில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை 8 மணிக்கு முன்பாக அவர் காணாமல் போனதைப்பற்றி அவசர அறிவிப்பை வெளியிட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சிறுவன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இச்சாவுக்கு பின்னே ஏதாவது சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை இல்லை என்றும், மரண காரணம் குறித்து வெளிப்படையாகக் கூறாமல், குடும்பத்தின் தனியுரிமையை மதிப்பதற்காக அறிவிக்கப்பட மாட்டாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சிறுவனின் குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.