கனடாவில் காணாமல் போன இரண்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்பர்ட்டா மாகாணம் கல்கரியின் கனனாஸ்கீஸ் பகுதியின் நதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போவ் நதியில் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார்.
நேற்றைய தினம் பிற்பகல் முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹெலிகொப்டர் மற்றும் படகுகளின் உதவியுடன் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போய் சில மணித்தியாலங்களில் தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




