Reading Time: < 1 minute

கனடாவில் களவாடப்பட்ட 138 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இந்த வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் ஒன்பது மில்லியன் டொலர் பெறுமதியான களவாடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட கும்பல் ஒன்று வாகனங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், லெபனான், கொலம்பியா, கொங்கோ போன்ற நாடுகளுக்கு களவாடப்பட்ட வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் வாகனக் கொள்ளைகளுடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.