Reading Time: < 1 minute

கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

சுமார் 251 வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

களவாடப்பட்ட வாகனங்கள் இத்தாலி வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விலை அதிகமான மற்றும் உயர் பண்டக்குறிகளைக் கொண்ட வாகனங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

இத்தாலிய பொலிஸார் இந்த வாகனங்களை மீட்டுள்ளனர். இன்டர்போல் மற்றும் கனடிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

போலியான தகவல்களுடன் இந்த வாகனங்கள் கொள்கலன்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.