Reading Time: < 1 minute

கனடாவின் பிரிடிஷ் கொலம்பியா மாகாணத்தில் கரடி தாக்கி பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

வான்கூவர் அருகே உள்ள அன்மோர் (Anmore) கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிசி கன்சர்வேஷன் ஆபிசர் சர்வீஸ் தெரிவித்ததின்படி, செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு முன், பாதிக்கப்பட்ட பெண் தன் வீட்டிற்கு அருகே நடந்து சென்றபோது, அவரது வீட்டின் மூலையிலிருந்து ஒரு கருப்பு கரடி திடீரென தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கரடி விரட்ட முயன்றும், அது தொடர்ந்து நெருங்கியதே தவிர, பின்னடைவே இல்லை,” என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அந்த கரடி பெண்ணை கடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தோட்டத் தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி கரடி மீது பாய்ச்சி, அவர் ஓடி தப்பிக்க முடிந்தார்,” என சமூக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளினால் அந்த கரடியை கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த பகுதியில் தற்போது கரடி பிடிக்க வலையமைக்கப்பட்டு விசாரணை தொடருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திலும் கரடி ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் கனடாவில் பதிவாகியிருந்தது.