Reading Time: < 1 minute

கனடாவில் ஓடும் வாகனங்களிலிருந்து சுமார் 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

Tamil Business Directory

பயணம் செய்து கொண்டிருந்த ட்ரக்டர் டெய்லர் ரக வாகனங்களுக்குள் பிரவேசித்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு பாரியளவு பொருட்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனங்கள் சிகப்பு சமிக்ஞைகளில் நிறுத்தப்பட்ட போது, சந்தேக நபர்கள் வாகனத்திற்குள் புகுந்து பொருட்களை களவாடியுள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் இவ்வாறு பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.