Reading Time: < 1 minute

கனடாவில் உணவு வழங்குவதாக கூறி பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

Tamil Business Directory

டொரன்டோவின் டப்லின், ப்ளூ வீதிகளுக்கு அருகாமையில் வீடற்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

போதை மருந்து வழங்கி கொடூரம்
வீடற்ற பெண் ஒருவருக்கு ஒரு வேளை உணவும் இரவு தங்குவதற்கு வசதியும் அளிப்பதாகவும் உறுதியளித்து இவ்வாறு துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு போதை மருந்து வழங்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீடற்ற பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நபர் அந்தப் பெண்ணுக்கு உணவு வழங்கி தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாகவும் பின்னர் அவருக்கு போதை மருந்து வழங்கி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

54 வயதான அலி ஜாஸிம் அபௌட்டா என்ற நபரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதா குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் வேறு பெண்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.