Reading Time: < 1 minute

கனடாவில் அண்மையில் வீதி விபத்தில் உயிரிழந்த மூன்று மாத சிசுவின் பெற்றோர் உருக்கமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

கோகுல்நாத் மணிவண்ணன் மற்றும் அஸ்விதா ஜவாஹர் தம்பதியினர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிள்ளையையும் பெற்றோர் ஆகிய மூன்று பெறுமதி மிக்க உயிர்களை இழந்து தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வீடு முழுவதிலும் மூன்று மாத மகனின் நினைவுகள் பரவிக் கிடப்பதாகவும் வீட்டுக்குள் செல்லும் தைரியமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

குறுகிய காலத்தில் விலைமதிப்பற்ற நினைவுகளை மகன் அதித்யா வியான் வழங்கிச் சென்றுள்ளதாக அவர்கள் உருக்கமான பதிவிட்டுள்ளனர்.

மணிவண்ணனின் பெற்றோரான மணிவண்ணன் சிறிவாசபிள்ளை மற்றும் மஹாலக்ஸ்மி ஆனந்தகிருஸ்ணன் ஆகியோர் சென்னையிலிருந்து கனடா வந்து சில தினங்களில் இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

பேரப்பிள்ளையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் கனடா வந்ததாக மணிவண்ணன் தெரிவிக்கின்றார்.

இந்த துயரமான தருணத்தில் தனிமையை விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.