Reading Time: < 1 minute

கனடாவில் உணவு விநியோகிப்பவர்களைப் போன்று தோன்றி வீடு ஒன்றை கொள்ளையிட்ட நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

வீட்டுக்குள் புகுந்து ஆயுதமுனையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவின் மில்டன் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஆயுதங்களை கையில் வைத்திருந்த போதிலும், இந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு எதனையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த ஒரு ஆண் தாக்கப்பட்ட காயப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு உயிர் ஆபத்து இல்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் இந்த வீடு கொள்ளையிடப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முகமூடி அணிந்த நான்கு பேர் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.