Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
எல்ல பிரதேச மசாஜ் நிலையத்திற்கு சென்ற கனேடிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிகிச்சையாளரை கண்டுபிடிக்க எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மசாஜ் நிலையத்திற்கு சென்ற பெண்
விடுமுறைக்காக நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண் எல்ல பசறை வீதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாஜ் சேவையில் ஈடுபட்டிருந்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக எல்ல பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




