Reading Time: < 1 minute

கனடாவின் வெல்லென்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாயகரா பிராந்தியத்தில் 58 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்றும் பிக்கப் ரக வாகனம் மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிக்கப் வண்டியில் பயணம் செய்த சாரதியும் இரண்டு சக பயணிகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.