Reading Time: < 1 minute

கனடாவின் வாட்டர் லூ பிராந்தியத்தில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

டெஸ்லா ரக வாகனம் ஒன்றும் டொட்ஜ் ரக வாகனம் ஒன்றும் இவ்வாறு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ கிட்சனர் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் டெஸ்லா ராக வாகனத்தை செலுத்திய 25 வயதான சாரதியும், காரில் பயணித்த மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து குறித்த பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.