Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

நியூ பிரான்ஸ்விக் மாகாணத்தின் ஷெப்பீல்ட் பகுதியில் இந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனம் மரம் ஒன்றில் மோதி தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.

உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் எதனால் உயரிழந்தார்கள் என்பது பற்றிய விபரங்களையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நியூ பிரவுன்ஸ்விக் போலீசார் தெரிவித்துள்ளனர்.