Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரு விமானியும், ஒரு விமானப் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் இடிபாடுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பில் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.




