Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவின் கிரீக்டவுன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் அதிசயமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

சம்பவத்தினை நேரில் பார்த்த பெண் ஒருவர் விபத்து குறித்து விபரித்துள்ளார். மிக அரிதான வகையில் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் தப்பி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகாமையிலிருந்து கம்பம் ஒன்றில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது வாகனத்தின் சாரதியும், சக பயணிகளும் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சன நெரிசல் மிக்க வீதியில் தூக்கி எறியப்பட்டவர்கள் மீது வேறும் வாகனங்கள் மோதியிருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், தூக்கி எறியப்பட்ட நபர்களில் இருவர் தாமாகவே எழுந்து நடந்து செல்லக் கூடிய நிலையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை ஓர் அதிசயம் என்று கூற முடியும் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயம் அடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.