Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் கிழக்கு ஒன்றாரியோ பெலிவில் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ட்ரக்டர் டெய்லர் வண்டியொன்றுடன் மினி வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 25 வயதான ஆண், 22 வயதான பெண் மற்றும் 8 மாதங்களான குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




