Reading Time: < 1 minute

2025ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில், தங்களை கனடிய வருமான முகவர் நிறுவன அதிகாரிகளாக காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக கனடா பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

மோசடிக்காரர்கள் போலியான மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களிடம் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களைப் பெற முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

உண்மையான கனடிய வருமான முகவர் நிறுவனம், ஈடிரான்ஸ்வர் அல்லது குறுந்தகவல் மூலம் வரி திருப்பிச் செலுத்தலை அனுப்பாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அல்லது voice message வழியாக Social Insurance Number, வங்கி தகவல் அல்லது கடவுச்சீட்டு விவரங்கள் ஒருபோதும் கேட்கப்படாது என தெரிவித்துள்ளனர்.

கிறிப்டோ கரன்சி, கிப்ட் கார்ட் மூலம் பணம் செலுத்துமாறு கோருவது போன்றவை மோசடியின் முக்கிய அறிகுறிகளாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடிக்காரர்கள், அதிகாரப்பூர்வ கனடிய வருமான முகவர் நிறுவன இணையதளத்தைப் போல தோன்றும் போலி இணையதளங்களுக்கும் மக்களை வழிநடத்தக்கூடும் என எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகமான தொடர்புகள் கிடைத்தால் கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.