Reading Time: < 1 minute

கனடாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கப்பம் கோரல் (Extortion) சம்பவங்கள் தொடர்பாக, 35 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் (CBSA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த மார்ச் 12, 2026 நிலவரப்படி, கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இது தொடர்பாக 372 குடிவரவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 70 பேருக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டு (Removal Orders), இதுவரை 35 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முக்கியக் குற்றவாளிகள் இருவரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், 2022-ல் மாணவர் விசா மூலம் கனடா வந்த இவர், கடந்த நவம்பர் 2025-ல் கைது செய்யப்பட்டார்.

மிரட்டிப் பணம் பறித்தல், தீவைப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கிக் குற்றங்களில் ஈடுபடும் ஒரு குற்றவியல் கும்பலில் உறுப்பினராக இருந்ததற்காக இவர் கடந்த ஜனவரி 19 அன்று நாடு கடத்தப்பட்டார்.

சுக்னாஸ் சிங் சாந்து, 2016-ல் தற்காலிகக் குடியிருப்பாளராக வந்த இவர், ‘ஒருங்கிணைந்த குற்றச்செயல்களில்’ ஈடுபட்டதற்காகக் கடந்த பெப்ரவரி 3 அன்று பலத்த பாதுகாப்புடன் (Under Escort) நாடு கடத்தப்பட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

குறிப்பாக, தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த மிரட்டல்களுக்கு முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.