Reading Time: < 1 minute

கனடா – ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் அதிகளவில் கேள்வியுடைய தொழில்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tamil Business Directory

அதிக கேள்வியுடைய தொழில்கள்
ரொறன்ரோவில் சராசரி சம்பளங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பளம்
2023 செப்டம்பரில், கனடாவின் வேலைச் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தது, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. போக்குவரத்து, உணவு சேவைகள், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கல்விச் சேவைகள் போன்ற துறைகள், வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

சராசரியாக 65,000 டொலர்கள் முதல் 130,000 டொலர்கள் வரையில் வருடாந்த சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் கனடாவின் வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் பலர் ரொறன்ரோவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.