Reading Time: < 1 minute

அமெரிக்காவில் இருந்து சாரணியா நகரத்தில் உள்ள Blue Water Bridge எல்லை வழியாக வந்த ஒரு வர்த்தக லாரியில், மறைத்து வைத்து 187 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்த முயன்ற ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 27 வயதான கரம்வீர் சிங் (Karamveer Singh) என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அமெரிக்க எல்லையை கடந்த பிறகு, சந்தேகத்துக்கிடமான லாரி இரண்டாம் நிலை சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அப்போது, போதை மருந்து கண்டுபிடிக்கும் நாயின் உதவியுடன், 6 பெட்டிகளில் மறைக்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்துகளின் சந்தை மதிப்பு மட்டும் $23.2 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் கரம்வீர் சிங் கைது செய்து, கனடா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை பறிமுதல் நடவடிக்கைகள், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிசாரின் முக்கிய பங்களிப்பை காட்டுவதாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.