Reading Time: < 1 minute

2025 டிசம்பர் மாதத்தில் கனடாவுக்கு பயணம் செய்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

Tamil Business Directory

அதேவேளை, வெளிநாட்டு (அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள) பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது.

2025 டிசம்பரில் அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் கனடா பயணம் கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.5 சதவீதம் குறைந்து, மொத்தம் 16 லட்சம் (1.6 மில்லியன்) வருகைகளாக பதிவாகியுள்ளது.

அமெரிக்கர்கள் கார் மூலம் கனடாவிற்கு வந்த பயணங்களும் 7.5 சதவீதம் குறைந்துள்ளன.

அந்த கார் பயணங்களில் 50.7 சதவீதம் ஒரே நாளில் திரும்பிச் செல்லும் பயணங்களாக இருந்தன. இதற்கு மாறாக, அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நாடுகளிலிருந்து கனடாவுக்கு வந்த பயணிகள் 14.1 சதவீதம் அதிகரித்து 5,09,500 பேராக உயர்ந்துள்ளனர்.

இவர்களில் 90.7 சதவீதம் விமானம் மூலம் வந்துள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகளவில் குறித்த காலப் பகுதியில் கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த மூன்று நாடுகள் சேர்த்து கடந்த டிசம்பரில் வெளிநாட்டு வருகைகளில் 31.3 சதவீதத்தை உருவாக்கியுள்ளன.

கனடியர்களின் வெளிநாட்டு பயணங்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைந்து, மொத்தம் 35 லட்சம் (3.5 மில்லியன்) பயணங்களாக இருந்தன.

அமெரிக்காவிலிருந்து கார் மூலம் திரும்பிய கனடியர்களின் பயணம் 30.2 சதவீதம் குறைந்து 15 லட்சமாக பதிவாகியுள்ளது. அவற்றில் 68.4 சதவீதம் ஒரே நாள் பயணங்களாக காணப்படுகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.