Reading Time: < 1 minute

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி, அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக, அனிதா ஆனந்துக்கு அந்த பதவி கையளிக்கப்பட்டுள்ளது.

அனிதாவின் தாய் பஞ்சாபைச் சேர்ந்தவர் எனவும் தந்தை தமிழகத்தை ச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் 1960களின் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனிதா, சட்டம், கல்வி மற்றும் பொது சேவை துறைகளில் வலுவான தடம் பதித்தவர் எனவும் அவரது கணவரான ஜான் (John Knowlton) ஒரு சட்டத்தரணியாக இருப்பதுடன் வணிக நிர்வாகியாகவும் உள்ளார் எனவும் இத் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனிதா, ஏற்கனவே தேசிய பாதுகாப்புத்துறை, போக்குவரத்து, உள்நாட்டு வர்த்தகம் முதலான துறைகளில் அமைச்சராகவும், கருவூல வாரியத் தலைவராகவும் பதவிகள் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.