Reading Time: < 1 minute

கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் மல்ரொனி (Brian Mulroney) தனது 84ம் வயதில் காலமானார். கனடாவின் 18ம் பிரதமராக மல்ரொனி கடமையாற்றியுள்ளார்.

Tamil Business Directory

குபெக் மாகாணத்தின் Baie-Comeau ல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமொன்றில் மல்ரொனி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ஜோன் டெபின்பேர்க்கரின் ஆலோசகர் என்ற அடிப்படையில் மல்ரொனி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

1983ம் ஆண்டு கொன்சர்வடிவ் கட்சியின் தலைவராக தெரிவாகிய மல்ரொனி, 1984ம் ஆண்டில் கனடாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

மல்ரொனி தனது பதவிக் காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்தவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் புகலிடம் கோரி முதல் தடவையாக கப்பலில் கனடா வந்தடைந்த நாட்டின் பிரதமராக மல்ரொனி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் மல்ரொனி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார் என பாராட்டப்படுகின்றது.