Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த விபத்து 7ம் இலக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.