Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

அதிகாலை வேளையில் மார்க்கம் குடியிருப்புத் தொகுதியொன்றில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வீட்டிற்கு எதிரில் உள்ள பாதையில் வெற்று தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வாகமொன்று சம்பவத்தில் நின்றதாக தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் சிலர் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.