Reading Time: < 1 minute

கனடாவின் டொரொண்டோ நோர்த் யோர்க் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நபர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டான் மில்ஸ் சாலை மற்றும் எக்லிங்டன் அவென்யூ கிழக்கு சந்திக்கும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தபோது, நான்கு நபர்கள் ஒரு வாகனத்திலிருந்து இறங்கி அவரை அணுகி கடத்த முயற்சித்துள்ளனர்.

இதில் ஒருவர், பாதிக்கப்பட்ட நபர்மீது துப்பாக்கி எடுத்து காட்டி, வாகனத்தில் ஏற உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நபர் எதிர்வினையாக கூச்சலிட்டு உதவிக்கேட்டதால் சந்தேகநபர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் சாம்பல் நிற Audi SUV வகை வாகனத்தில் பயணித்ததாக தெரிகிறது. அந்த வாகனத்தின் புகைப்படத்தை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.