Reading Time: < 1 minute

கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் கோவிட் 19 தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இட்டாபிகொக் பொது வைத்தியசாலையின் ஓர் பகுதியில் இவ்வாறு கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவில் இந்த தொற்று பரவுகை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த சிகிச்சை பிரிவிற்கு நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளையும் சுகாதார பணியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் சில முன்னெச்சரிக்கையின் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமைகள் உன்னிப்பாக அவதானித்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.