Reading Time: < 1 minute

கனடாவின் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Tamil Business Directory

ஆளுநர் நாயக மாளிகையில் பணியிட துன்புறுத்தல் விசாரணையின் அறிக்கையைத் தொடர்ந்து இவர் தனது பதவியில் இருந்து விலக்கியுள்ளார். தனக்கு எதிரான பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துள்ள நிலையில் இவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இவரது பதவி விலகலை பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கை மூலம் உறுதிப்படுத்தினார். இடைக்கால அடிப்படையில், கனடாவின் தலைமை நீதிபதி ஆளுநர் நாயகத்தின் கடமைகளை நிறைவேற்றுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்

இவருக்கான மாற்றீடு குறித்த பரிந்துரை அறிவிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.