Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோ மாகாணம் மிட்லாந்து பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் வீடு ஒன்றில் தீ பிடித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடந்ததாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.




