Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நகரமாக பர்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

டொரொன்டோவை தலைமையிடமாகக் கொண்ட காப்பீட்டு நிறுவனம் மை சொயிஸ் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், பர்ரி நகரம் மிகவும் ஆபத்தான நகரமாக முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு அந்த இடத்தை ப்ரான்போர்ட் பெற்றிருந்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை விட விபத்துகளின் அதிகரிப்பேயாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டிலிருந்து 200,000க்கும் மேற்பட்ட கார் காப்பீட்டு கோரிக்கைகளை (insurance quotes) ஆய்வு செய்து, 2026ஆம் ஆண்டுக்கான ஆபத்து நிலைகளை நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

விபத்துகள் மற்றும் கவனச்சிதறல் ஓட்டம், அதிவேகம் போன்ற விதிமுறை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு எடைச்சார்ந்த சராசரி முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகரங்களுக்கு 0 முதல் 5 வரை மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 0 என்பது மிகவும் ஆபத்தானது; 5 என்பது மிகவும் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது. பர்ரி நகரம் 0.6 என்ற மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது.

அந்நகரில் 14.54 சதவீத ஓட்டுநர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஏழில் ஒருவருக்கு மேற்பட்டோர் மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மேலும், 12.41 சதவீத ஓட்டுநர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.