Reading Time: < 1 minute

ஒன்றாரியோவின் கிழக்கு லண்டன் பகுதியல் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு சிறார்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு லண்டனின் வேட்ரன் நினைவுப் பூங்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய பஸ், கார் ஒன்று மற்றும் பிக்கப் ரக வாகனமொன்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் மற்றும் கார் கடுமையான சேதத்த்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் 11 மற்றும் 14 வயதான சிறார்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் எவருக்கும் உயிராபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.