Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.

Tamil Business Directory

கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாவுரி ஸ்கொட் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் லொத்தர் சீட்டிலுப்பு நிறுவன சந்தாதாரர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தானியங்கி அடிப்படையில் இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது லொத்தர் சீட்டு பரிசு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.