Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியால காலத்தில் இவ்வாறு அதிகளவில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாபெல்யூ, ஹியரெஸ்ட், சட்பரி, ரிம்மின்ஸ், கோச்ரென்ஸ், நோர்த்பே உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவுகையை அவதானிக்க முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுமார் பன்னிரெண்டு புதிய காட்டுத் தீ பரவுகை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சில இடங்களில் பெருமளவான பகுதிகளில் காட்டுத் தீ பரவுகை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




