Reading Time: < 1 minute

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர.

Tamil Business Directory

விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு ஒன்றாரியோவின் 11ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மிஸ்ஸிசாகுவா மற்றும் பிராம்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலை சுமார் 12 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்தினால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டது என்பதை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ போலீசார் தெரிவிக்கின்றனர்.